உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே டி.வி.ரெங்கநாதபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 17-ல் காப்புக்கட்டு விழாவை துவங்கி பக்தர்கள் விரதம் இருந்தனர். இரண்டு நாள் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியின் முதல் நாளில் கிராமத்தில் கனி வைத்தல், தீர்த்தம், முளைப்பாரி அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் விழாவில் 2-ம் கால யாக பூஜைகள் துவங்கின. பின், விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், நாடி சந்தானம், மூலிகை நாள் வேள்வி, பூர்ணாகுதி, தீப ஆராதனையுடன் கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !