காரட்டை வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
வானுார்: காரட்டை கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிளியனுார் அருகே காரட்டை கிராமத்தில் ஸ்ரீ பெருந்தேவி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆண்டாள் தாயார், கருடன், விநாயகர், துவராகபாலகர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 8.00 மணிக்கு விசேஷ ஆராதனையும், மாலை 3.00 மணி முதல் இரவு அஷ்டபந்தனம் சமர்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6.00மணி முதல் 9.00 மணி வரை கோபூஜை துவங்கி தொடர்ந்து ேஹாமங்கள் நடந்தன. காலை 9.30 மணிக்கு வரதராஜ பெருமாள் உள்பட மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு சுவாமிக்கும், தாயாருக்கும் திருகல்யாணம் வைபவம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.