உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல் மாத்தினிபட்டியில் கோயில் கும்பாபிஷேகம்

மேல் மாத்தினிபட்டியில் கோயில் கும்பாபிஷேகம்

வேடசந்துார்:வேடசந்துார் அருகே உள்ள மேல்மாத்தினிபட்டியில் உள்ள கற்பக விநாயகர், மங்கள காளிகாம்பாள், பகவதியம்மன் திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபூஜை. யாக பூஜைகளுடன் துவங்கிய விழாவில் கடம் புறப்பாட்டை தொடர்ந்து அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு ஒக்கலிகர் சங்க கௌரவ தலைவர் ஆறுமுகசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் பெரியசாமி, எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், சக்கரபாணி, செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவரும் முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன், செயலாளர் நடராஜன், துணைச்செயலாளர் தனஞ்செயன், துணைத்தலைவர்கள் மொட்டையப்பன், முத்துச்சாமி, சுப்பையன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !