சிந்தாமணி வல்லப கணபதி கோவிலில் 8ம் ஆண்டு விழா
ADDED :2657 days ago
நாமக்கல்: நாமக்கல் மகரிஷி நகர், சிந்தாமணி வல்லப கணபதி கோவிலில், எட்டாம் ஆண்டு பெருவிழா நடந்தது. நாமக்கல் அடுத்த, வகுரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மகரிஷி நகரில் அமைந்துள்ள, சிந்தாமணி கணபதி கோவிலில் எட்டாம் ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு மோகனூர் காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி, கணபதி யாகம் நடந்தது. 6:30 மணிக்கு, ஆன்மீக வேள்வி அமைப்பாளர், அரசு பரமேஸ்வரன் தலைமையில் சொற்பொழிவு, 7:30 மணிக்கு மங்கள ஆராத்தி நடந்தது.