தான்தோன்றியம்மன் கோவிலில் பாலஸ்தாபன விழா கோலாகலம்
ADDED :2704 days ago
கோபி: மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், பாலஸ்தாபனம் விழா, கோலாகலமாக நடந்தது. கோபி தாலுகாவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு அடுத்து, பிரசித்தி பெற்ற கோவிலாக, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இங்கு, கும்பாபிஷேகம் நடந்து, 19 ஆண்டுகளாகிறது. இதனால் கோவிலின் கட்டமைப்பு மோசமானது. கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் திருப்பணி துவங்க வாய்ப்புள்ளதால், பாலஸ்தாபன விழா (பாலாலயம்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாலஸ்தாபன விழா, நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ச்சியாக, இரண்டாம் கால யாக பூஜை நேற்று நடந்தது. இதை தொடர்ந்து ஆகம விதிப்படி பாலாலயம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.