மனசுக்குள் மகாபாரதம்!
ADDED :2766 days ago
பாரதம் என்பது வெறும் பங்காளிச் சண்டையா? பாண்டவ கவுரவ யுத்தமா? கிருஷ்ணனின் சித்தமா? எது உண்மை...? எல்லாமும் உண்மை தான்; நிகரில்லா தன்மை தான்!
மகாபாரதம் வெறும் கதை மட்டுமல்ல... அது வாழ்வின் விதை!
முள் வருவதும் விதையே. மூங்கில் வருவதும் விதையே.
இந்த முரண்களை உணர்த்துவதால் மகாபாரதம் வித்தையே.
பாரதம் நடந்த இடமான குருக்ஷேத்திரம் – மனம்.
பாண்டவர்கள் ஐந்து பேர் – நல்ல எண்ணங்கள்.
கவுரவர்கள் நூறு பேர் – கெட்ட எண்ணங்கள்.
இப்போது சொல்லுங்கள் பாரதப்போர் முடிந்த கதையா... அல்லது முடியாத விடுகதையா...? பாண்டவர்களும் கவுரவர்களும் ஒரே ரத்தம். அதுபோல, மனிதர்களுக்கு மனம் ஒன்று தான் ஆனால் எண்ணங்கள் மட்டும் வேறு வேறு. நல்ல எண்ணத்திற்கும் தீய எண்ணத்திற்குமான சண்டை ஒருநாளும் ஓயாதது. இந்த ஓயாத சண்டையை உணர்த்தியதில் மகாபாரதம் சாயாதது!