திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வாடா விளக்கு
ADDED :2655 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3 இடங்களில் வாடா மகா தீப விளக்குகள் நேற்று அமைக்கப்பட்டன. அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி நேற்று திருவாட்சி மண்டபம், ஆஸ்தான மண்டபம், மகா மண்டபங்களில் 3 அடி உயரம், 2 அடி அகலத்தில் வாடா விளக்குகள் அமைக்கப்பட்டன. விளக்கினுள் மேல்பகுதியில் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட குவளையும், திரியுள்ள குவளை 10 லிட்டர் கொள்ளளவும், கீழ் பகுதியில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பித்தளை குவளை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும்.கோயில் சார்பில் 10 மில்லி நெய் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்கள் வாங்கி வாடா விளக்கில் ஊற்றி வழிபடலாம்.வாடா விளக்கு அமைக்கும் நிகழ்ச்சியில் துணை கமிஷனர் மாரிமுத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.