லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பவித்ரோச்சவம்
ADDED :2953 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், பவித்ரோச்சவம் நடந்தது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 47வது ஆண்டு பவித்ரோச்சவம் கடந்த 26ம் தேதி துவங்கியது. அன்று காலை மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 90 திருவாராதனம் நடந்தது. நேற்று காலை கருடசேவை, அவப்ரூதம், பூரணாஹூதி, சாத்துமுறை, பவித்ரோச்சவ பூர்த்தி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் மாருதி டிரஸ்ட் செய்திருந்தது.