மானசரேவரில் 500 யாத்திரீகர்கள் தவிப்பு
ADDED :2654 days ago
சிமிகோட், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 500 பேர் மோசமான வானிலை காரணமாக சிக்கியுள்ளனர். நேபாளத்தில் கைலாஷ் மானசரோவர் பகுதி அமைந்துள்ளது. பக்தர்கள் இங்கு புனிதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 500-க்கும் மேற்பட்ட யாத்திரீகள் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றனர். இதி்ல் சென்னையைச் சேர்ந்த சிலரும் சென்றனர். இவர்கள் நேபாளின் சிமிகோட் என்ற பகுதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மீண்டும் விமானம் மூலம் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சேவை பாதித்தது. மேலும் மோசமான வானிலை காரணமாக திரும்ப முடியாமல் அங்கு சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.