தர்மபுரி துர்க்கையம்மன் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ADDED :2654 days ago
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில், நேற்று, துர்க்கையம்மன் தேரோட்டம் நடந்தது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, துர்க்கையம்மன் கோவிலில், கடந்த, ஒரு வாரமாக, அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம், காவிரி, கங்கை தீர்த்த அபி?ஷகம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு மேல், தேரோட்டம் நடந்தது. இதில், பெண்கள் மட்டும் கலந்து கொண்டு தேரை நிலை பெயர்த்தனர். இதில், சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, பொதுமக்கள், முக்கிய வீதியாக தேரை இழுத்து சென்றனர். இரவு, தேர் கோவிலை வந்தடைந்தது.