உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி, ரோப்கார் 40 நாட்கள் இயங்காது!

பழநி, ரோப்கார் 40 நாட்கள் இயங்காது!

பழநி: பலத்த காற்று வீசும் ஆடி மாதம், ரோப்கார் இயக்கத்தை நிறுத்தி, ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


பழநி முருகன் மலைக் கோவிலுக்கு, ரோப்கார் மூலம் மூன்று நிமிடங்களில் எளிதாக பக்தர்கள் செல்கின்றனர். பலத்த காற்று, மழையின்போது, ரோப்கார் சேவை நிறுத்தப்படும். தற்போது பலத்த காற்று காரணமாக தினமும் சேவை பாதிக்கப்படுகிறது. ஆடியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பதால், அந்த மாதம் முழுவதும் ரோப்காரை நிறுத்தி, ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரோப்கார் மாதத்தில் ஒருநாளும், ஆண்டுக்கு ஒருமாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடக்கிறது. இந்தாண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து, 40 நாட்கள் நிறுத்த உள்ளோம். புதிதாக கம்பி வடம், உருளைகள் மாற்றப்படும். பெட்டிகள் புதுப்பிக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !