உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் அமைந்துள்ள, அரசு காத்த அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், அரசு காத்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணி முடிந்து, ஜூன், 28ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகம் துவங்கியது. இந்தக் கோவில் அருகே உள்ள காமாட்சி அம்மன், சந்தவெளி அம்மன், பாண்டவதுாதர், சர்வதீர்த்த குளம், ஏகாம்பரநாதர், ராமநாதீஸ்வரர் ஆகிய கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்த, யாகத்தில் வைக்கப்பட்டது. நேற்று காலை, 9:20 மணிக்கு, குடங்கள் புறப்பாடு நடைபெற்று, 9:30 மணிக்கு, மூலவர் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். நேற்று இரவு, 8:00 மணிக்கு, அம்மன் வீதிவுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். =மாமல்லபுரம் அடுத்த, எடையூர், கோகிலமேடு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலிலும் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !