உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை கோயிலில் சிலைகள் உடைப்பு

வடமதுரை கோயிலில் சிலைகள் உடைப்பு

வடமதுரை: வடமதுரை அருகே கோயில் வளாகத்தில் மது குடித்ததை கண்டித்ததால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் சுவாமி சிலைகளை சேதப்படுத்தி தப்பினர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை செங்குறிச்சி ரோட்டில் பண்ணமலை, வள்ளிமலை இடையே ஊற்றாக்கரை வனப்பகுதி உள்ளது. இங்கு பழமையான விநாயகர், சப்தகன்னிமார், கருப்பணசுவாமி கோயில் உள்ளது. வேலாயுதம்பாளையம் கிராம மக்களால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலை சுற்றிலும் அதிகளவில் மரங்களுடன் இயற்கையான சூழல் உள்ளது. பல ஊர்களை சேர்ந்தவர்களும் இங்கு மினி சுற்றுலாவாக வந்து செல்வது வழக்கம்.

சிலைகள் உடைப்பு: நேற்று இப்பகுதிக்கு ஆட்டோக்களில் வந்த சிலர் மது அருந்தினர். இதனை கிராம மக்கள் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அக்கும்பல், கோயில் வளாகத்தில் இருந்த நவகிரகங்கள், முருகன், விநாயகர், தீப கன்னி பாம்பு, மான், நாய் சிலைகளை கற்களால் தாக்கி சேதப்படுத்தினர். இது குறித்து வேலாயும்பாளையம் கிராம பிரமுகர் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !