எடச்சேரி பஜனை குழு திருப்பதிக்கு பாதயாத்திரை
ADDED :2703 days ago
வானுார்: எடச்சேரியில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டனர். கிளியனுார் அருகே எடச்சேரி கிராமத்தில் இருந்து திருaப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் குழுவினர், கடந்த மாதம் 9ம் தேதி துளசிமணி மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டனர். எடச்சேரி சித்தி விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கிய, நடைபயண யாத்திரையை, கிராம முக்கியஸ்தர்கள் சேகர், ஏழுமலை, ஆனந்தராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரை குழுவினர் கிராம முக்கிய வீதிகளில் பஜனை பாடி வீதிஉலா வந்தனர்.