ரங்கநாதபுரம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: ரங்கநாதபுரம் கிராமத்தில், வள்ளி தெய்வானை சமேத வேல்முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வானுார் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள, வள்ளி தெய்வானை சமேத வேல்முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 30ம் காலை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை நான்காம் கால பூஜை, கோ பூஜையும் நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், காலை 7:05 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாலவிநாயகர், பாலமுருகன், வள்ளி தெய்வானை சமேத வேல்முருகனுக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் ரங்கநாதபுரம், லிங்காரெட்டிப்பாளையம், காட்டேரிக்குப்பம், வானுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ரங்கநாதபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.