சித்தம் சுவாமி குருபூஜை விழா; பக்தர்கள் பரவசம்
ADDED :2697 days ago
திருப்பூர்:திருப்பூர், இடுவாய் அருகில், எட்டிக்கொட்டை சித்தம் சுவாமிகளின், 97 வது குருபூஜை விழா, நடந்தது. விழா, காலை, 9:00 மணிக்கு, பஜனை பக்தி பாடல்களுடன் துவங்கியது. சண்முகம், நடராஜன் தலைமை வகித்தனர்.சுவாமிக்கு, அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, ஆதரவற்ற பள்ளிகளுக்கு உதவும் கந்தசாமி மற்றும் இலவச யோகா பயிற்சி அளிக்கும் சவுந்திரராஜன் கவுரவிக்கப்பட்டனர். நல்லாசிரியர் விருது பெற்ற ராமசாமி சிறப்புரை ஆற்றினார். நிர்வாகி உதயகுமார் நன்றி கூறினார்.