உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனிடம் மனு வழங்கி மக்கள் வழிபாடு

அம்மனிடம் மனு வழங்கி மக்கள் வழிபாடு

சேலம்: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் ரத்தாக, அம்மனிடம் மனு வழங்கி, சிறப்பு பூஜை செய்து, மக்கள் வழிபட்டனர்.


சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு, சுக்கம்பட்டி, ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, அடிமலைபுதூர், ஆச்சாங்குட்டப்பட்டி மக்கள், நூதன முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 1ல், குள்ளம்பட்டி மக்கள், மாடுகளை அழைத்து வந்து பெரியாண்டிச்சி அம்மனிடம், பூஜை நடத்தினர். நேற்று, ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி செல்வி, 32, சக்தி மாரியம்மன் கோவிலில், எட்டு வழிச்சாலை திட்டம் ரத்தாக வேண்டி, மனு எழுதி, அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்தார். அப்போது, பெண்கள் சிலர், அருள் வந்து ஆடி, எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேறாது. மீறி நிறைவேற்றப்பட்டால், ஆட்சி கவிழும் என, வாக்கு கூறினர். தொடர்ந்து, ஆடிய பெண்கள் மீது, மக்கள் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !