கஜலட்சுமி தெப்பக்குளத்திற்கு வேலி அமைப்பு
ADDED :2696 days ago
பண்ணைக்காடு:பண்ணைக்காடு ஊரல்பட்டி விநாயகர் கோயில் அருகே கஜலட்சுமி தெப்பக் குளத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு சிறப்பு ேஹாமம், வேள்வி பூஜை நடந்தது. இக்குளம் பாரம்பரியமாக தொன்று தொட்டு, ஆன்மிக வழிபாட்டு தலத்திற்கு புண்ணிய தீர்த்தமாக பயன்பட்டு வருவதும், கிராமத்தில் மழையின்றிவரம் கேட்க குளத்தை துார் வாருவது வழக்கம். சில ஆண்டுகளாக இக்குளத்தில் சிலர் தவறி விழுந்து இறந்துள்ளனர். தெப்பக்குளத்திற்கு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என தினமலர் இதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நிர்வாகிகள் பாதுகாப்புவேலி அமைத்துள்ளனர்.