மச்சவதார சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2696 days ago
கீழக்கரை, ஏர்வாடி, முத்தரையர் நகர் மச்சவதார சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆனி மாத சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் காணப்பட்டார். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சக்தி ஸ்தோத்திரம், சிவநாம அர்ச்சனை, பஜனை பாடப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பரத்மா ராமநாதன் செய்திருந்தார்.