ஓரிச்சேரி பத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2649 days ago
அந்தியூர்: ஓரிச்சேரி பத்ர காளியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, விமர்சையாக நடந்தது. அந்தியூர் அருகே, ஆப்பக்கூடல், ஓரிச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி, கடந்த, 3ல், விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து கோவில் கோபுர கலசங்கள் வைத்தல், மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. நேற்று காலை விநாயகர், பத்ரகாளியம்மன், துர்கை அம்மன், கருப்பண சாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஓரிச்சேரி, ஓரிச்சேரி புதூர், ஆப்பக்கூடல், விஜயகாலனி மற்றும் சுற்று வட்டாரப்பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டனர்.