காளஹஸ்தி உண்டியல் வசூல் ரூ.90 லட்சம்
ADDED :2696 days ago
நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியலில், 20 நாட்களில், 89.95 லட்சம் ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 20 நாட்களில், 89 லட்சத்து, 95 ஆயிரத்து, 963 ரூபாய் ரொக்கம், 155 கிராம் தங்கம், 386 கிலோ வெள்ளி, 164 வெளிநாட்டு பணம் ஆகியவை இருந்தன. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.