உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாம சங்கீர்த்தனை திருத்தணியில் துவக்கம்

நாம சங்கீர்த்தனை திருத்தணியில் துவக்கம்

திருத்தணி:திருத்தணி அடுத்த, கே.ஜி. கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், சாய்பாபாவின், 100ம் ஆண்டு சமாதி பூஜையை ஒட்டி, 108 நாட்கள் அகண்ட நாம சங்கீர்த்தனை பூஜை, நேற்று காலை, யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 64 கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அகண்ட நாம சங்கீர்த்தனை பஜனை துவங்கியது. இந்த பஜனை, வரும், அக்., 19ம் தேதி வரை, தினமும், 24 மணி நேரமும் நடைபெறும். நேற்று காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !