உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் பொன் மாணிக்கவேல் தரிசனம்

பழநி கோயிலில் பொன் மாணிக்கவேல் தரிசனம்

பழநி:பழநி முருகன் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார்.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் பழநிக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு வந்தார். பலத்த காற்று காரணமாக ரோப்கார் இயங்காததால், வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தார். திருஆவினன்குடியில் குழந்தை வேலப்பரையும் வழிபட்டார். பழநிகோயில் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து நடந்துள்ள நிலையில், வழக்கு தொடர்பாக ஐ.ஜி., வரவில்லை. சுவாமி தரிசனம் செய்துவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டார் என போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !