உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூஜை விழா

சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூஜை விழா

திருப்பரங்குன்றம்: சோமப்பா சுவாமிகள் 1968 ஆனி மாதம் திங்கள் கிழமை 11 ம் தேதி  திருப்பரங்குன்றத்தில் சமாதி நிலையடைந்தார்கள். அதை முன்னிட்டு 11.07.2018 அன்று காலை 9.00 மணிக்குமேல் 12.30 மணிக்குள் திருக்கூடல்மலை, சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியில் 50 வது ஆண்டு குருபூசை நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

10.07.2018  செவ்வாய்- காலை 9.00 மணி சிறப்பு வேள்வி
காலை 10.00 மணி அபிசேகம், இரவு 7.00 மணி  -திருவிளக்கு வழிபாடு மற்றும் தமிழிசை

11.07.2018 -புதன்
பகல் 11.00 மணி - ஆன்மீக சொற்பொழிவு
பகல் 12.00 மணி - சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம்
மாலை 5.00 மணி - தமிழிச, இரவு 8.00 மணி - கட்டிக்குளம் கிராமப் பொதுமக்கள், கட்டிக்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மு. ஆறுமுகச்சேர்வை நினைவு, அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கலையரங்கத்தில் தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம் வழங்கும் நாடகம்

தொடர்புக்கு:
க. இ.சே. இரா. தட்சிணாமூர்த்தி யாதவ்
மேனேஜிங் டிரஸ்டி - 5வது தலைமுறை
சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம்
திருக்கூடல்மலை (புசுண்டர்மலை), திருப்பரங்குன்றம்
மதுரை - 625 005.
தொலைபேசி: 0452 - 2484714, 94422 72220, 98421 24843.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !