மதுரை மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம்: வரும் 15ல் துவக்கம்
ADDED :2644 days ago
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பாக நடைபெறும் விழாக்களில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் முக்கியமானதாகும். இவ்வருடம் ஆடி மாத முளைக்கொட்டு விழா 15.7.18 அன்று தொடங்குகிறது. ஆடி மாத ஆயில்ய நட்சத்திரம் தொடங்கி பத்து நாள்களுக்கு விமர்சையாக முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. இந்த விழாவில் மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே கொடியேற்றம் நடைபெறும். விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் ஆடி வீதிகளில் அம்மன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.