உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தந்தையும் தனயனும்

தந்தையும் தனயனும்

இமயமலை மகா பெரியதாக இருக்கலாம்; கடுகு சின்னஞ்சிறியதாக இருக்கலாம். ஆனால், இமயமலைக்குள் இருக்கிற அத்தனை அவயவங்களும் கடுகுக்குள்ளும் இருக்கும். கடுகைக்கூட அப்படிப் பிரித்துக்கொண்டே போகலாம். கடைசியில் ஓர் அணு வந்து நிற்கும். அப்புறம் பிரிக்க முடியாது. சர்வ வியாபகமாக, இத்தனை அண்ட சராசரங்களாகப் பிரிந்திருக்கிற சிவ - சக்திகளைப் பிரிக்க முடியாமல் ஓரிடத்தில் பார்க்க வேண்டும் என்றால், அது அன்பு ஊற்றெடுக்கிற இருதய மத்தியில்தான். பலவாக அவர்களிடமிருந்து விரிந்திருப்பதெல்லாம் ஒன்றாகக் குவிவது, இந்த அன்பு என்கிற அணுவில்தான்.

அன்பும் சிவமும் இரண்டென்பர்
அறிவிலார்
அன்பே சிவமாவ(து)
ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ(து)
ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

என்கிறார் திருமூலர். அன்பு ஒன்றே உள்ள அந்த மனஸைத் தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் நம் மனஸும் நூறாயிரம் திசைகளில் ஓடாது; அன்பிலேயே முழுகிக் கரைந்து அன்பாகவே ஆகிவிடும். அருணகிரிநாதர் பெற்ற அனுபூதி இதுதான். பரமேசுவரன் வஸ்து (ட்ச்ttஞுணூ) அம்பாள் அதன் சக்தி (ஞுணஞுணூஞ்தூ) என்கிற சயின்ஸ் சூத்திரமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வஸ்துவின் ஸத்தை (சிவமயமான வெறும் இருப்பு), அதன் மகாசக்தி (அம்பாளின் ஆற்றல்) இதுகளை மட்டும் சொல்லிக்கொண்டு நமக்கு என்ன பிரயோஜனம்?

நம்மைக் கடைத்தேற்றப் போவது அவர்களுடைய அன்புதான், அருள்தான். இருவருடைய அன்பும் பொங்கிப் பெருகிக் கலந்த இந்த இடம்தான் அவர்களுடைய செல்லப் பிள்ளையான சுப்ரமண்யர். உள்ளே ஒன்றாக இருந்த அன்பு, இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாகக் கலந்து, இப்படி நாம் உபாஸிப்பதற்குச் சுலபமாக சுப்ரமண்யமாக மூர்த்தீகரித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !