திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்
ADDED :2690 days ago
திண்டுக்கல், திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் விஸ்வக்சேனர் திருமண் காண்டல் நகர் சோதனை செய்தல், மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி ரதவீதி வழியாக நகர் வலம் வந்தார். ஏற்பாடுகளை தக்கார் இளஞ்செழியன், செயல் அலுவலர் நரசிம்மன் செய்திருந்தனர்.