குப்பிட்டாலே லட்சுமி யோகம்
ADDED :2678 days ago
பதினான்கு ஆண்டுகள் ராமன் காட்டுக்குச் சென்ற போது, உடன் சென்றவன் லட்சுமணன். யாரும் லட்சுமணனை ராமனுடன் உடன் செல்லும்படி வற்புறுத்தவில்லை. ஆனாலும், லட்சுமணன், ராமனுக்காக சேவை செய்யும் நோக்கத்துடன் அயோத்தியை விட்டுப் புறப்பட்டான். இதனை வால்மீகி, ‘லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:’ என்று வர்ணிக்கிறார். அரண்மனை வாழ்வைவிட, அழியாத செல்வமான பரம்பொருளான ராமனுடன் இருப்பதே சிறந்த செல்வம் என லட்சுமணன் நினைத்தானாம். இதை ‘லட்சுமி சம்பந்தம்’ என்கிறார் வால்மீகி. கடவுளை வணங்கும் எல்லா நேரமும் நமக்கும் லட்சுமி யோகமே என்பது இதன் மறைபொருள்.