புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் உபன்யாசம்
ADDED :2746 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் சுவாமி கோவிலில் மந்திராலயா ராகவேந்திரா சுவாமிகள் மடத்தின், பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் உபன்யாசம் நிகழ்த்தினார்.
மந்திராலய ராகவேந்திரா சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் நேற்று புவனகிரி ராகவேந்திரர் கோவிலுக்கு வருகை தந்தார், அங்கு ராகவேந்திரருக்கு, சிறப்பு பூஜை செய்தார். பின்னர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து உபன்யாசம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், ராகவேந்திரர் அறக்கட்டளை நிர்வாகிகள் உதயசூரியன், கதிர்வேலு, நரசிம்ம ஆச்சாரியார், ரகோத்தம ஆச்சாரியார், ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.