மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு
ADDED :2746 days ago
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 14 வாஸ்து சாந்தியுடன் துவங்கி 25 வரை நடக்கிறது. விழாவையொட்டி கோயில் மற்றும் உபயதாரர் சார்பில் மீனாட்சி அம்மனுக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற சேவைகள் நடத்திட இயலாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.