சவுந்தரராஜப் பெருமாள் கோபுர கலசங்களை மீட்க வலியுறுத்தல்
ADDED :2747 days ago
வடமதுரை, வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் கோபுர கலசங்களை மீட்க வேண்டும் என, மாவட்ட கலெக்டரிடம் மனு தரப்பட்டுள்ளது. வடமதுரை மகாத்மா காந்தி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி செல்வராஜ் மாவட்ட கலெக்டரிடம் தந்த மனு: வடமதுரையில் சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷே கம் கடந்த 2006ல் நடந்தது. அப்போது அங்கிருந்த பழமையான கோபுர கலசம் அகற்றப்பட்டு, புதிய கலசம் மாற்றி அமைக்கப்பட்டது. அதே போல வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இருந்த கோபுர கலசமும் தற்போது காணவில்லை. பழமை வாய்ந்த இந்த கோபுர கலசங்களை மீட்டு சன்னதியில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக மனு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.