தங்கநாயகி அம்மன் கோவிலில் யாகம்
ADDED :2645 days ago
சூலுார்: சூலுார் அடுத்த அரசூர் தங்கநாயகிஅம்மன் கோவிலில், 58வது ஆண்டு விழாவை ஒட்டி, மகா சண்டியாகம் நடந்தது. நேற்று காலை மூல மந்திரேஹாமம், சண்டி ேஹாமம் துவங்கியது. சுமங்கலி, பிரம்மச்சாரி, தம்பதி, குமாரி பூஜைகள் நடந்தன. மகா பூர்ணாஹூதி முடிந்து, தங்கநாயகி அம்மனுக்கு கலசாபிேஷகம் நடந்தது.விழாவில், ஆதீனங்கள் அருளுரை வழங்கினர். பனங்காடை குலத்தை சேர்ந்தபக்தர்கள் பங்கேற்றனர்.