உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

அரிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

தலைவாசல்: தலைவாசல், புத்தூரிலுள்ள, அரிய நாச்சியம்மன் கோவிலில், கடந்த, 4ல், காப்பு கட்டுதலுடன், தேர் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம், மாரியம்மன் தேரோட்டம் நடந்தது. நேற்று, வாழை, இளநீர், நுங்கு, அன்னாசி பழங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தேரில், நாச்சியம்மனை எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் வடம்பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக இழுத்து வந்து, கோவிலை அடைந்தனர். இதையடுத்து, அங்கு சிறப்பு பூஜை செய்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !