திருத்தணியில் கிருஷ்ணர் கல்யாண உற்சவம்
ADDED :2799 days ago
திருத்தணி,: திருத்தணியில் நடந்த, கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். திருத்தணி - அரக்கேணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதி கோவிலில், கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா, வெகு விமரிசையாக நேற்று நடந்தது. உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. அதன் பின் நடந்த கல்யாண மாலை பூஜையில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, நெமிலி குருக்கள் ரங்கநாதன் மற்றும் விழாக் குழுவினர் செய்தனர். முன்னதாக, பரிகார பூஜைகள் நடந்தன.