வலம்புரி விநாயகர், ஊர்காத்த மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2971 days ago
உசிலம்பட்டி, உசிலம்பட்டி நகராட்சி 2வது வார்டு வலம்புரி விநாயகர், ஊர்காத்த மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜை ஜூலை 10 கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை கோ பூஜை, யாகசாலை பூஜைகளுக்கு பின் புனித நீர் கொண்டு செல்லப்பட்டு கோயில் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தன. புத்துார் குமரர் கோயில் பட்டர் ராம்குமார் குழுவினர் கும்பாபிேஷகம் நடத்தினர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்தனர்.