சாணார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை பூஜை
ADDED :2867 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, புஷ்பம், தயிர், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.