சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் கோவிலில் 15ல் கூட்டு பிரார்த்தனை
ADDED :2649 days ago
சிற்றம்பாக்கம்: சிற்றம்பாக்கம், கும்பேஸ்வரர் கோவிலில், வரும், 15ம் தேதி, கூட்டுப் பிரார்த் தனையும், திருவாசகம் முற்றோதுதலும் நடைபெற உள்ளது.
கடம்பத்தூர் ஒன்றியம், சிற்றம்பாக்கம் ஊராட்சியில், உள்ளது குழந்தவள்ளி அம்மை உடனுறை கும்பேஸ்வரர் சுவாமி கோவில்.
இங்கு, 15ம் தேதி, குழந்தைகளுக்கு உடல் நலம், கல்விச் செல்வம், குழந்தைப்பேறு, கடன் நிவர்த்தி, திருமணம் கைக்கூட அருள் வேண்டல், நலம் மற்றும் உலக நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.
பின், மேல்நல்லாத்தூர் முக்குளத்தீஸ்வரர் சிவனடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், காலை, 8:30 மணி முதல், பிற்பகல், 1:30 மணி வரை தேவாரம், திருவாசகம் முற்றோதுதல்
நடத்துகின்றனர்