உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவருக்கு முத்தங்கி சேவை

திருவள்ளூர் வீரராகவருக்கு முத்தங்கி சேவை

திருவள்ளூர்:திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், பெருமாள், தாயாருக்கு முத்தங்கி சேவையும், இரவு தெப்ப உற்சவமும் நடந்தது.

நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவர் கோவிலில், ஆனி அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவருக்கு முத்தங்கி சேவை நடந்தது.

ஹிருதாபநாசினி குளத்தில் நீராடிய பக்தர்கள், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின், பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.ஆனி தெப்ப உற்சவம், நேற்று (ஜூலை 12)ல், மாலை, 6:00 மணிக்கு துவங்கியது.

ஹிருதாபநாசினி குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் தெப்பத்தில் வலம் வந்ததை பக்தர்கள் வழிபட்டனர்.மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்த பின், இரவு, பெருமாள் வீதி புறப்பாடு நடைபெற்றது. தெப்ப உற்சவம், நாளை, நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !