ஈரோடு சக்தி விநாயகர் கோவிலில், மகா ருத்ர யாகம் 16ல் துவக்கம்
ADDED :2645 days ago
ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி அருகே, செம்மாம்பாளையம் கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் மஞ்சள் வியாபாரிகள் சங்கத்தின், மஞ்சள் வணிக வளாகத்தில் உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், உலக சேமத்துக்காக மகா ருத்ர யாகம், சத சண்டி மகா யாக பெருவிழா நடக்கிறது. வரும், 16ல் மாலை, 6:00 மணிக்கு கிராம சாந்தியும், 17ல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை, கோ பூஜை, யாகங்கள், தீபாராதனை நடக்கிறது. வரும், 23ல் மகா சண்டி ஹோமம், சிறப்பு பூஜை நடக்கிறது.