கவர்க்கல் மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :5006 days ago
வால்பாறை : கவர்க்கல் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கோவிலில் வரும் 28ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. வரும் 27ம் தேதி காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், 6.00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. காலை 11.00 மணிக்கு மாவிளக்கு எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. விழாவில் கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வேலாயுதன், குணசேகரன், கன்னியப்பன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.