யோகிராம் ஆஸ்ரமத்தில் இன்னிசைக் கச்சேரி
ADDED :2639 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நூற்றாண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, பகவான் யோகிராம் சுரத்குமார் சன்னதிக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அவரது, திருஉருவ சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பகவானின் பஜனைகளை பாடி வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, பகவானின் வாழ்க்கை வரலாறு குறித்து, ஸ்ரீமதி ஐஸ்வர்யா குமாரவேல் குழுவினரின் நாடகம் மற்றும் நித்யஸ்ரீ மகாதேவன், அவரது குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.