உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா கோலாகலம்

சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா கோலாகலம்

பனமரத்துப்பட்டி: சிதம்பரேஸ்வரர் கோவிலில், முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனூர் ஊராட்சி நத்தமேடு கிராமத்திலுள்ள பழமையான சிதம்பரேஸ்வரர் கோவில், அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. கடந்தண்டு, கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபி?ஷகம் நடந்தது. நேற்று, முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. காலை, 11:00 மணி முதல் தேவார திருமுறை பாடல்கள் பாடப்பட்டன. மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு பால், இளநீர் உள்ளிட்ட, 12 வகையான அபி?ஷகம் செய்யப்பட்டது. சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாள் வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !