கரூர் வந்த விதவிதமான விநாயகர் சிலைகள்
ADDED :2747 days ago
கரூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல விதமான கண்கவரும் விநாயகர் சிலைகள் கரூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரும், செப்., 13ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சேலத்தில் பேப்பர் கூழ் மூலம் தயாரிக்கப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள், லாரி மூலம் நேற்று கரூர் கொண்டு வரப்பட்டன. தற்போது, முதல்கட்டமாக, 18 வித விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதம் உள்ள நிலையில், தற்போதே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.