உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை தீர்த்தவாரி

தை அமாவாசை தீர்த்தவாரி

புதுச்சேரி : தை அமாவாசையை முன்னிட்டு, கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் அமாவாசை, சிறப்பு வாய்ந்த தாகக் கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவர்களை அலங்கரித்து, தீர்த்தவாரிக்கு கடற்கரைக்கு எழுந்தருளச் செய்வர்.தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை, தீர்த்தவாரிக்காக, மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து, உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு, கடற்கரையில் எழுந்தருளினர்.கடல் தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய சாமிகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !