கூடலுார் கூடல் சுந்தர வேலவர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2641 days ago
கூடலுார்: நேற்று ஆடிமாத பிறப்பை முன்னிட்டு கூடலுார் கூடல் சுந்தர வேலவர் கோயிலில் உள்ள சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பஜனைப்பாடல்கள் பாடப்பட்டது. தாமரைக்குளம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள காளியம்மன் கோயில், குறுவனத்து ஆற்றுப்பாலத்தின் அருகில் உள்ள பகவதியம்மன் கோயிலில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.