உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்

பழநி பெரியநாயகியம்மன் கோயில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்

பழநி:தைப்பூசவிழா நடைபெறும் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், ஆடி லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கி (ஜூலை 17) ஆக.,9 வரை நடக்கிறது.ஆடி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில், நேற்று மாலைஅம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் செய்து, நுாறாயிரம்மலர்கள் துாவி அர்ச்சனை நடந்தது. ஆக.,9 வரை தினமும் லட்சார்ச்சனை நடக்கிறது. ஆக.,10ல் ஆடிலட்சார்ச்சனை யாக பூஜையும், அன்றிரவு வெள்ளித்தேரோட்டமும் நடக்கிறது. ஒவ்வொரு ஆடிவெள்ளி அன்றும் அம்மனுக்கு முத்தங்கி, சந்தனகாப்பு, மீனாட்சி, தங்கக்கவசம் அலங்காரம் செய்கின்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், உதவிஆணையர்செந்தில்குமார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !