உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம்

விருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம்

விருதுநகர்: விருதுநகர் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் ஏாளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடிமாதத்தின் கண்ணாக போற்றப்படும் ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் அம்பிகை வழிபாட்டுக்குரிய சிறப்பு நாட்களாகும். இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு விருதுநகர் துள்ளுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பராசக்தியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிப்பட்டனர். விருதுநகர் வெயிலுந்தம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் நடைபெற்றது. அனைத்து அம்மன் கோயில்களிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !