ஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED :2659 days ago
மானாமதுரை: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியைமுன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டுஅதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷகங்கள்,ஆராதனைகள்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.காலையிலேயே பக்தர்கள் கூட்டத்தினால் ஏராளமானவர்கள்நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் மாவிளக்கு, எலுமிச்சைவிளக்கு ஏற்றி வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மடப்புரத்திற்கு மதுரை, மானாமதுரை,சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.