உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

உலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்பூர், பெரியபாளையம் ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. மொத்தம், 751 பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், பூ மாலைகளுடன் திருவிளக்கு ஏற்றி, வழிபாடு நடத்தினர்.


திருப்பூர், ஆர்.வி.இ., நகர் முதல் வீதியில் உள்ள ஸ்ரீ சாயி லட்சுமி ஆன்மீக நல மையத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மங்கள இசை, வேத பாடல்கள், சாயிபஜன் நிகழ்ச்சி நடந்தது. இரவு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.l நத்தக்காடையூர், ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில், 26ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், சிறப்பு அபிேஷகம், அம்பாள், பெருமாள், ஈஸ்வரன், மாரியம்மன், முனியப்பன், விநாயகருக்கு தீர்த்த பூஜை செய்யப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !