உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானியம்மனை தரிசிக்க பக்தர்கள் பாதயாத்திரை

பவானியம்மனை தரிசிக்க பக்தர்கள் பாதயாத்திரை

ஊத்துக்கோட்டை: ஆடி மாத முதல் வெள்ளியை ஒட்டி, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பெண்கள், ஆண்கள் பாதயாத்திரையாக, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு சென்றனர். ஊத்துக்கோட்டை அடுத்த, பெரியபாளையம் பவானியம்மன் கோவில், பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. இங்கு, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம், ஆந்திர மாநிலங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். ஆடி மாதத்தை ஒட்டி முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 10 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும், ஆடி மாதம் முதல் நாள் மற்றும் முதல் வெள்ளிக்கிழமை, திரளான பக்தர்கள், பாதயாத்திரையாக சென்று அம்மனை வழிபடுவர். நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, மீஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள், சிறுவர் - சிறுமியர் பாதயாத்திரையாக சென்று, பெரியபாளையம் பவானியம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !